PrroBooks.com » Poetry » Paneer Pookal by Kalai Selvi Arivalagan (win 10 ebook reader .txt) 📕

Book online «Paneer Pookal by Kalai Selvi Arivalagan (win 10 ebook reader .txt) 📕». Author Kalai Selvi Arivalagan



பன்னீர் பூக்களாய்....

அழியாத நினைவுகளின்
இனிய பக்கங்கள்
பன்னீர் பூக்களின்
நறுமணத்தில் கோலமிட
என்றும் நிறைந்திருக்கும்
என் மனதினில்.
சில்லென்ற மழைச் சாரலில்
தண்ணென்று சொரிந்து
வெண்மையாக படர்ந்திருக்கும்
பன்னீர் பூக்களின் மென்மையினில்
தனித்திருக்கும் என் மனது!
இன்றும் அவை மலர்ந்திருக்கும்
காரிருள் சூழ்ந்த இரவுப் பொழுதுகள்
என் மனக்கண்ணில் தோன்றி
இளமைக் காலத்தில் தளும்பிய
ஆசைகளை இன்றும்
நினைவுபடுத்துகிறதே!

உன் வாசனை

 

காற்றின் அசைவினில்

உன் வாசம் அறிவேன்

 

எத்தனையோ மணித்துளிகளின்

தூரத்தினில் நீ இருந்தாலும்

உன் மணத்தினை அறிவேன்!

 

மனதின் அசைவுகளில்

உன் எண்ணத்தின் துகள்கள்

காற்றினில் கண்ணுக்குப் புலப்படாத

சின்னஞ்சிறு உணர்வுகளால்

மெல்ல மெல்ல படர்ந்து

என் நாசிகளில்

காதலின் சுவாசத்துடன்

மணம் நிறைந்த வாசமாய்

என்னை வந்தடையும்

மாயத்தினை என்னவென்று

நான் சொல்லுவேன்

சொற்களைத் தேடித் தவித்து

நிற்கும் என் நாவே!

நீயும் நானும் உலகமே

உலகம் நம்மில் பாதியே

உன் நலனில் அக்கறை கொண்டால்

உலகம் மிக அழகானதே

உன் நலனில் நீ தவறிழைத்தால்

உலகமும் தவறாய் சுழலுமே!

மெல்ல மெல்ல செல்லுமே

செல்ல செல்ல தவழுமே

வாழ்வின் உயிரோட்டமே

செல்களின் சுவாசமே!

சுவர்களாகிடும் புரதங்களின்

கோட்டைதனில்

ஓர் விரிசல் வந்தால் விபரீதமே

உடலின் இயக்கமதிலே

குருதியின் போக்கிலே

உயிர் மூச்சு சென்றிடும் நேரமதிலே

வாழ்வின் ஆரோக்கியம் படர்கிறதே!

ஒழுக்கமென்னும் மந்திரத்தை

நாளும் நீ மறந்திடாமல் கூறிடு -

சீரிய வாழ்க்கைச் சுவடுகள்

மெல்ல மெல்ல செல்லுமே

செல்ல செல்ல தவழுமே

வாழ்வின் உயிரோட்டமே

செல்களின் சுவாசமே!

Imprint

Publication Date: 04-19-2020

All Rights Reserved

Dedication:
பன்னீர் பூக்கள்

Free e-book «Paneer Pookal by Kalai Selvi Arivalagan (win 10 ebook reader .txt) 📕» - read online now

Similar e-books:

Comments (0)

There are no comments yet. You can be the first!
Add a comment